(UTV|COLOMBO)-போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிறைச்சாலையில் மரண தண்டனை அனுபவித்துவரும் நிலையிலும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடும் கைதிகளுக்கு எதிர்காலத்தில் தூக்குத்தண்டனை விதிப்பதற்கான நடைமுறையில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கண்டி – கெட்டம்பை விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மரண தண்டனை குறித்து பௌத்தர்களிடையே பல்வேறு கருத்துகள் காணப்பட்டாலும், தவறான வழியில் பயணிக்கும் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசியல் எதிர்வாதிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், கடந்த மூன்றரை வருடங்களில் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]