(UTV|COLOMBO)-மரண தண்டனை இலங்கையில் மீள அமுலாக்கும் நோக்கில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பிராந்திய உதவி பணிப்பாளர் தனுஷிகா திஸாநாயக்க விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், அதற்கு எதிரான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக மரண தண்டனையை நிறைவேற்றாமல் இலங்கை சிறந்த தடத்தைப் பதிவு செய்துள்ளது.
மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]