Trending News

புதிய கிளையை ஆரம்பித்த DFCC

(UTV|COLOMBO)-தமது வங்கி வலையமைப்புக்கு புதிய கிளை ஒன்றினை DFCC வங்கி, ஜூலை மாதம் 5ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்தது. DFCC வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரி லக்ஸ்மன் சில்வா அவர்களினால், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் முன்னிலையில் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது.

மாரவில, இல. 293 நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள கிளையினை, தொலைபேசி இலக்கம் 0322 250313ஃ0322 250306 அல்லது 0322 250308 என்ற தொலைநகல் ஊடாக அடைய முடியும்.

DFCC வங்கியின் மூலோபாய பரவலாக்கலின் ஒரு அங்கமாக, நிதி உள்ளடக்கலை வசதியளிப்பதுடன், கூடுதலான வாடிக்கையாளர்களின் இலுகவான அணுகும் வசதியையும் உறுதி செய்கின்றது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள், நிலையான கணக்குகள், கடன்கள், அடகு சேவைகள், குத்தகை வசதிகள், NRFC/RFC கணக்குகள், கடன் அட்டைகள், அந்நியச் செலவாணி போன்ற வங்கிச் சேவைகளின் விஸ்தரிப்புடன், வாடிக்கையாளர்களால் அணுக முடியும்.

மேலும், லங்காபே தானியங்கி பணம் எடுத்தல் வலையமைப்புடன் இணைந்து, நாடெங்கிலும் உள்ள 4,000இற்கும் மேற்பட்ட தானியங்கி பணம் எடுத்தல் இயந்திரங்களில், பணம் மீளப்பெறல், கணக்கு மிகுதியை அறிதல் என்பவற்றை முன்னெடுக்க முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“No divisions within the UNP” – MP Bandula Lal Bandarigoda

Mohamed Dilsad

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்

Mohamed Dilsad

Amith Weerasinghe further remanded

Mohamed Dilsad

Leave a Comment