Trending News

1000 மீள்திறன்மிக்க மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் சுபக புலமைப்பரிசில் வழங்கள் இன்று முதல் ஆரம்பம்

(UTV|COLOMBO)-எதிர்கால சவால்களை வெற்றிக் கொள்வதற்காக திறமைகளுடன் கூடிய ஆக்கதிறன் உள்ள  சமூதாயத்தை உறுவாக்க 2017ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் பிரேரனைக்கிணங்க இந்நாட்டில் கல்விபயிலும் மாணவர்களில் புதிய கண்டுபிடிப்புகள் அல்லது விஞ்ஞான ஆய்வுகள் விளையாட்டு¸ அழகியல் போன்ற துறைகளில் சாதனையீட்டி அதனைத் தொடர நிதி ரீதியாக பின்னடைவை நோக்கி உள்ள 1000 மாணவர்களை இணங்கண்டு அவர்களை எதிர்கால சாதனையாளர்களாக்கும் முயற்சிக்காக சுபக புலமைப்பரிசில் திட்டம் அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது. க.பொ.த உஃத பயிலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வீதம் 25 மாதங்களுக்கு மொத்தமாக 50000 ரூபாய் வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்று (12) நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமர் ரனில்விக்ரமசிங்க அவர்கள் கலந்துக் கொண்டு புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இவருடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாககிருஸ்ணன் கல்வி அமைச்சின் கண்கானிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ{றுப் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டடியாராச்சி உட்பட கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் அதிகாரிகள் உத்தியோகஸ்த்தர்கள் தெரிவு செய்யபட்ட மாணவர்கள் பெறறோர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
இந்த திட்டத்தை மாணவர்கள் ஊடாக நடைமுறைப்படுத்தவதன் ஊடாக மீள்திறன்மிக்க மாணவர்கள் உறுவாக்க முடியும். இந்த நாட்டின் அபிவிருத்தக்கு மாணவர்கள் மத்தியில் இன்று முதல் ஆக்கத்திணையும் ஊக்கத்தினையும் உறுவாக்கவும் முடியும். இந்த நாட்;டில் பல ஆயிரகணக்கான மீள்திறன்மிக்க மாணவர்கள் காணப்பட்ட போதும் வருமானம் குறைந்த இந்த மாணவர்களுக்கே வழங்கப்டுகின்றது. இதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கண்டி தலதா மாளிகையை சுற்றி பலத்த பாதுக்கப்பு…

Mohamed Dilsad

Miguel Diaz-Canel selected as next President of Cuba

Mohamed Dilsad

ரயில் பிரச்சினைகளை தீர்க்க இன்றும் விசேட பேச்சுவார்த்தை

Mohamed Dilsad

Leave a Comment