Trending News

அபிமெக்தியின் ஜோடியாக அக்‌ஷரா

(UTV|INDIA)-கமல்ஹாசன், திரிஷா நடித்த `தூங்காவனம்’ படத்தை இயக்கியவர் ராஜேஷ் செல்வா. இவர் அடுத்ததாக விக்ரம், அக்‌‌ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுவே அபி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அபி ஏற்றுள்ள இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் நிதினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆக்‌‌ஷன் மற்றும் எமோ‌ஷனல் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் ஆரம்பமாக உள்ளன.

அக்‌ஷராஹாசனுக்கு ஜோடியாக அபிமெக்தி நடிப்பதாக தகவல் வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

விமலின் மூளையை பரிசோதிக்கவும் – ரிஷாத் பாராளுமன்றத்தில் கோரிக்கை (VIDEO)

Mohamed Dilsad

රෝහල් රැසක ඉන්සියුලින් හිඟයක්

Editor O

இலஞ்ச,ஊழல் ஆணைக் குழு அதிகாரிகளுக்குப் பயிற்சி

Mohamed Dilsad

Leave a Comment