Trending News

திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம்

(UTV|THAILAND)-அண்மையில், தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து வீரரை மீட்பதற்காக கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்தது.

மீட்புப் பணியின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு சிறப்பு நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் தாய்லாந்து கடல் அதிரடிப்படையினர் ஈடுப்பட்டு இருந்தனர்.

ஆபத்துகள் நிறைந்த, வெள்ள நீரில் முழ்கியிருக்கும் மிகவும் குறுகலான குகைப்பாதை வழியாக, அங்கு கடைசியாக சிக்கியிருந்த 4 சிறுவர்களையும், 25 வயது கால்பந்து பயிற்சியாளரையும் மீட்புக் குழுவினர் கடும் சிரமத்துக்கிடையில் அழைத்து வந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் விரைவில் ஹாலிவுட் திரைப்படமாக உருவாகவுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பியூர் ஃபிளிக்ஸ் திரைப்பட நிறுவனம், தாய்லாந்து சம்பவத்தைத் திரைப்படமாக்க முடிவெடுத்துள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ஸ்காட், ஆடம் ஸ்மித் இதுகுறித்து ஊடகங்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் இப் படத்துக்காக அதிகபட்சமாக ரூ. 413 கோடி வரை (60 மில்லியன் டாலர்) செலவழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Bus fares increased from midnight tomorrow

Mohamed Dilsad

Tourism in Sri Lanka takes a hit following violence and attacks

Mohamed Dilsad

Voters should be free from slave-mentality

Mohamed Dilsad

Leave a Comment