Trending News

கைதான மாணவர்கள் இன்று நீதிமன்றத்தில்

(UDHAYAM, COLOMBO) – கொழும்பில் உள்ள இரண்டு பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அவர்களது பெற்றோருடன் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகளின் மாணவ குழுக்களுக்கிடையே நேற்று இந்த தோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலின் போது பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் 15 பேர் வரையில் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலுக்கு இடையே, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொத்தமான பேரூந்து, தனியார் பேருந்து, இரண்டு வேன்கள் மற்றும் ஒரு சிற்றூர்ந்து என்வனவற்றிட்கும் மாணவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு டீ.எஸ் சேனாநாயக்க கல்லூரியில், இரண்டு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூன்று பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

LIVE UPDATE: அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ!

Mohamed Dilsad

අය-වැයෙන් වැඩිහිටි දීමනාව ඉහළ දැමේ

Editor O

உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள்

Mohamed Dilsad

Leave a Comment