(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் தங்களது திட்டங்களை செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிதி கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி 6 லட்சத்து 48 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறல்கள் மற்றும் மறுசீரமைப்பு, மனித உரிமை நிலைநாட்டல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு இந்தளவு நிதி அவசியப்படுகிறது.
இதனை உதவு நாடுகள் வழங்க முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.