Trending News

உலக வனாந்தர வார மாநாட்டில் ஜனாதிபதி இன்று விஷேட உரை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (16) இத்தாலியின் ரோம் நகரில் 6 ஆவது உலக வனாந்தர வார மாநாட்டில் உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், உலக வனப்பாதுகாப்புக் குழுவின் 24 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழமை இத்தாலியின் ரோம் நகருக்கு பயணமாகினார்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு வனாந்தரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய பங்களிப்பைக் கண்டறிவதாகும் என்பதே இம்முறை மாநாட்டின் தொனிப்பொருளாகும்.

இந்த சர்வதேச மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை மாநாட்டில் விசேட உரையை நிகழ்த்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்திருந்தது.

ஜனாதிபதி சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு வழங்கும் பங்களிப்பும் மற்றும் சுற்றாடல் தொடர்பில் அவரிடம் இருக்கும் தூர இலக்கும் என்பன இந்த விசேட உரை வழங்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மரம் வீழ்ந்து வாகன போக்குவரத்து பாதிப்பு

Mohamed Dilsad

சிறப்புப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலயம் திறப்பு

Mohamed Dilsad

Constitutional Assembly meets tomorrow

Mohamed Dilsad

Leave a Comment