Trending News

2022 உலக கிண்ண கால்பந்து போட்டிகள் கட்டாரில்

(UTV|QATAR)-உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று கால்பந்து.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கிண்ண கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரஷ்யாவில் உலக கிண்ண கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.

நேற்று நடைபெற்ற இறுதி போட்டியுடன் ரஷ்யாவில் கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு கட்டார் நாட்டில் உலக கிண்ண கால்பந்து போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உலக கிண்ண கால்பந்தை ஃபிபா தலைவர் கியானி இன்பான்ட்டினோவிடம் ஒப்படைக்க அதனை கட்டார் மன்னர் தமீம் பின் ஹமாத் அல் தானியிடம் ஒப்படைத்தார்.

இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடின், உலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்தியதும், அடுத்த உலக கிண்ணத்திற்கான பொறுப்புகளை கட்டாரிடம் ஒப்படைத்த அனுபவம் சாதனைக்குரிய நிகழ்வு என தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“TNA will not leave the government” – K. Sivagnanam

Mohamed Dilsad

Steps being taken to destroy huge cocaine haul

Mohamed Dilsad

Saudi Arabia: Unmarried foreign couples can now rent hotel rooms

Mohamed Dilsad

Leave a Comment