(UTV|COLOMBO)-போதைப்பொருள் விநியோக வலைப்பின்னலை முடக்குவதன் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அவர் இப்பாகமுவ மாவட்ட செயலகத்தில் புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் போதைப்பொருள் பிரச்சனை காரணமாக இன்று சிறு பிள்ளையும் வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பிரதம மந்திரி பதிலளித்து உரையாற்றினார்.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வர்த்தகம் முடக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அன்று போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மாத்திரம் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கப்பட்டார்கள். பெருமளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]