Trending News

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணி சுகந்திகா தற்காலிகமாக நீக்கம்

(UTV|COLOMBO)-சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பாக கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோவை, சங்கத்தின் அங்கத்துவத்தில் இருந்து தற்காலிகமாக நீக்க சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் ஒருமனதாக தீர்மானித்துள்ளது.

சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (18) மாலை ஒன்றுகூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் அங்கத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோ சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிமன்றம் குறித்து முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 5 சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Historic breakthrough for Sri Lanka cooperatives

Mohamed Dilsad

நாலக டி சில்வா நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு

Mohamed Dilsad

இரு ரயில்கள் சேவையிலிருந்து நிறுத்தம்

Mohamed Dilsad

Leave a Comment