Trending News

பிறந்த நாளுக்கு முன்பே விருந்து கொடுக்கும் சூர்யா

(UTV|INDIA)-சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ஜூலை 23-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஜூலை 23-ல் நடிகர் சூர்யா அவரது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், அன்று சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், சூர்யா பிறந்தநாளுக்கு டீசர் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜூலை 22ம் தேதி மாலை 6 மணிக்கு என்ஜிகே படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். ஜெகபதிபாபு வில்லனாக நடிக்க, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Remaining boys in Thai cave await rescue

Mohamed Dilsad

Theresa May to face vote of no confidence

Mohamed Dilsad

சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

Leave a Comment