Trending News

மூன்று இளைஞர்கள் கொலை வழக்கில் மொஹொமட் ரவூப் ஹில்மிக்கு மரண தண்டனை

(UTV|COLOMBO)-வெல்லம்பிட்டியவில், மூன்று இளைஞர்களைக் கொலை செய்த நபருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து, இன்று (20) தீர்ப்பளித்தது.

மொஹொம் ரவூப் மொஹொமட் ஹில்மி என்பவருக்கே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன், மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டாவது சந்தேக நபரான மொஹொமட் சித்திக் மொஹொமட் அம்ஜான் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு, வெல்லம்பிட்டியவில் வைத்து மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Seven Indian fishermen detained near Delft Island for poaching

Mohamed Dilsad

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

Mohamed Dilsad

Ethiopian woman gives birth and sits exams 30 minutes later

Mohamed Dilsad

Leave a Comment