Trending News

பலத்த காற்று வீசும் சாத்தியம்

(UTV|COLOMBO)-நாட்டின் தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, புத்தளத்தில் இருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய கடற்பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இஸ்ரேல் -பலஸ்தீன மோதலில் 8 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்…(நேரலை)

Mohamed Dilsad

වෛද්‍ය චමල් සංජීවට සමගි ජන බලවේගයේ තනතුරක්

Editor O

Leave a Comment