Trending News

2 ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது இலங்கை

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கொழும்பில் 20 ஆம் திகதி ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களையும் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் அணி 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில், 490 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களையும், தில்ருவன் பெரேரா மற்றும் தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.

இதனால் 2 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியை இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் 2 க்கு 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் இலங்கை அணி சுவீகரித்துக்கொண்டது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

Sri Lanka Navy arrests 27 Indian fishermen

Mohamed Dilsad

புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சரும் பதவியேற்பு

Mohamed Dilsad

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment