Trending News

கேரளாவில் நிபா வைரஸை தொடர்ந்து ஷிகெல்லா வைரஸ்

(UTV|INDIA)-கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபா வைரஸ் பரவியது. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாக பரவியதால் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது மக்கள் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

நிபா வைரஸ் தாக்குதலுக்கு  17 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அது கட்டுப்படுத்தப்பட்டது. இதன்பிறகே கேரள மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.

இந்த நிலையில் நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதால் இதுவும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஷிகெல்லா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜியான் என்ற 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. மேலும் 2 குழந்தைகள் இந்த பாதிப்பு காரணமாக அந்த வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

President reveals of Ministerial hand to assassinate him

Mohamed Dilsad

Stay order over Lalith-Kugan case extended

Mohamed Dilsad

Missing fishermen rescued and brought ashore

Mohamed Dilsad

Leave a Comment