Trending News

ஒரே நாளில் சமந்தாவின் இரு படங்கள் ரிலீஸ்

(UTV|INDIA)-சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் ரிலீசாகிய ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை ஆகிய மூன்று படங்களும் மெகா ஹிட்டாகியுள்ளது. இரும்புத்திரை தெலுங்கில் 50 நாட்களை கடந்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்த சீமராஜா படம் வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சமந்தாவின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி பவன் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள யு டர்ன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமும் சீமராஜா ரிலீஸ் தேதியான செப்டம்பர் 13-ஆம் தேதியே ரிலீசாக இருப்பதாக சமந்தா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடித்திருக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆதி, நரேன், பூமிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரேநேரத்தில் படம் ரிலீசாக இருக்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

UPFA to attend Parliament sessions on Dec. 18

Mohamed Dilsad

ஒன்றிணைந்த எதிரணி ஒருபோதும் பிளவுப்படாது

Mohamed Dilsad

Dulquer Salmaan to play Gemini Ganesan in biopic on Savitri

Mohamed Dilsad

Leave a Comment