Trending News

எதிர்வரும் 26 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள்

(UTV|COLOMBO)-கல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் நாளை  (26) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கமைய இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்கி நாளை மறுதினம் சுகயீன விடுமுறையை அனைவரும் எடுத்துக் கொள்வதுடன் கொழும்பில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்வேறு ஆசிரிய மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் கல்விச் சேவையில் இடம்பெறும் அரசியல் தலையீடுகளை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள், அதிபர் சங்கங்கள் இணைந்து 26 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அத்தோடு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பாரிய போராட்டமொன்றையும் முன்னெடுக்க உள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

තුර්කිය සටන් විරාමයට එකඟවෙයි

Mohamed Dilsad

පාරිභෝගික අධිකාරියෙන් වැටලීම් 24,700ක් : රු.මිලියන 207 දඩ ආදායමක්

Editor O

Trump cautious ahead of Putin summit

Mohamed Dilsad

Leave a Comment