Trending News

லாவோஸ் நாட்டில் அணைக்கட்டு உடைந்ததில் நுற்றுக்கணக்கானோர் மாயம்

(UTV|LAOS)-தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸின் அட்டாபேயு மாகாணத்தில் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2013-ம் ஆண்டு புதிய அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. அணையின் கட்டுமானப்பணி 90 சதவிகிதம் முடிந்த நிலையில், அடுத்தாண்டு திறக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை அணையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதனால், தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெள்ளமாக உருவெடுத்து 6 கிராமங்களை மூழ்கடித்தது. இந்த விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுமார் 6600 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

எதிர்வரும் 26 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள்

Mohamed Dilsad

“ARMY TROOPS WILL ENSURE SAFETY TO ALL COMMUNITIES,” ASSURES ARMY COMMANDER IN KANDY

Mohamed Dilsad

பேக்கரி உற்பத்தி பொருட்கள் 5 ரூபாவால் அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment