Trending News

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு…

(UTV|INDIA)-டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் 3 சிறுமிகளை ஒரு பெண்ணும், ஆணும் கொண்டு வந்தனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது 3 பேரும் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சிறுமிகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது பட்டினி காரணமாக 3 சிறுமிகளும் இறந்தது தெரியவந்தது. இறந்த 3 சிறுமிகளும் அக்கா, தங்கைகள். இந்த சிறுமிகளில் இளைய சகோதரிக்கு 2 வயதும், அடுத்த சகோதரிக்கு 5 வயதும், மூத்த சகோதரிக்கு 8 வயதும் இருக்கும். சிறுமிகளின் தந்தை ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ரிக்‌ஷா காணாமல் போய் விட்டது.

பிழைப்புக்கு வழி இல்லாததால், தனது நண்பர் ஒருவரது வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் தான் 3 சிறுமிகளும் இறந்து உள்ளனர். சிறுமிகள் இறப்பு முதலில் இயற்கையான இறப்பு என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கி இருந்த குடியிருப்பில் இருந்து சில மருந்து பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன.

எனவே சிறுமிகளின் உடல்கள் பிரேதபரிசோதனை செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே சிறுமிகள் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டு உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

“Solar Alliance can bring about solutions to create a greener, cleaner, healthy world” – President

Mohamed Dilsad

நயன்தாரா திரைப்படத்தில் ஹொங்கொங் கலைஞர்

Mohamed Dilsad

நாளை(09) சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

Mohamed Dilsad

Leave a Comment