Trending News

டாப்ஸி ரகசிய நிச்சயதார்த்தம்?

(UTV|INDIA)-தென்னிந்திய படங்களில் நடித்து வந்த டாப்ஸிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவருக்கு திருப்திகரமான வாய்ப்புகள் அமைந்தன. இந்நிலையில் மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தலா ஒரு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். டாப்ஸி தனது பாய்பிரண்டுடன் டேட்டிங் செய்வதாக அவ்வப்போது தகவல் வந்தது.

ஆனால் தனது பாய்பிரண்ட் பற்றி டாப்ஸி வாய்திறக்காமல் இருந்து வருகிறார். ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர்  மேதிஸ் போ, மற்றொரு வீரர் தனிஷ் ஆகியோரிடம் நெருக்கமாக அவர் பழகி வந்தார். இந்நிலையில் டாப்ஸிக்கும், மேதிஸுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவிவருகிறது. சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவா சென்றார் டாப்ஸி. அங்கு மேதிஸும் வந்திருந்தார். எளிமையாக நடந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.

நட்புடன் பழகி வந்த டாப்ஸியும், மேதிஸும் சமீபகாலமாக ஒருவரையொருவர் சந்திக்காமல் தவிர்த்து வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இருவரும் சமீபத்தில் கோவாவுக்கு குடும்பத்தினருடன் வந்திருந்தனர். ரகசியமாக நடந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கவே இவர்கள் வந்திருந்தார்களாம். தற்போது நடித்து வரும் படங்களை முடித்து கொடுத்தபிறகு டாப்ஸியின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கலாம் என்று தெரிகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

திரிபோஷா எடுத்து வருவதாக கூறி சென்ற இளம் பெண்! வீடு திரும்பவில்லை

Mohamed Dilsad

US Embassy in Sri Lanka closes to the public

Mohamed Dilsad

Flood Alerts: Tri-Forces launch rescue operations

Mohamed Dilsad

Leave a Comment