(UDHAYAM, COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வு கூறியுள்ளது.
எனினும் நாளை மற்றும் நாளை மறுதினமும் தென் பிரதேசங்களில் மழை பொழிவு அதிகரிக்க கூடும் என அந் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நாட்டின் ஊடாக இடைக்கிடையில் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீட்டருக்கு இடையில் கடும் காற்று மற்றும் நாட்டை சூழவுள்ள கடற்பிரதேங்களில் மணிக்கு 60 கிலோ மீட்டர் அளவில் கடும் காற்று வீசக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ பிரதேசத்தில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக பலபிட்டிய வரை மற்றும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.