(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமாக கடல் வழியாக நியுசிலாந்து நோக்கி செல்ல முற்பட்ட 8 பேர் நீர்கொழும்பு கதிரான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு காவற்துறையால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, மாரவில, கல்முனை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 23 தொடக்கம் 42 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.