(UDHAYAM, COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ சற்று முன்னர் காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையானார்.
கடந்த அரசாங்கத்தில் கட்டுமான பணிகளின் போது இடம்பெற்ற முறைகேட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலையாகியுள்ளார்.
நிதி மோசடி விசாரணை பிரிவில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்றுக்கு அமைய கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.