Trending News

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா 4 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

நிரோஷசன் திக்வெல்ல 69 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் டீ கொக் 87 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் அகில தனஞ்சய மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Letter distribution recommences

Mohamed Dilsad

பிச்சைக்காரர்களிடம் சிக்கிய பிரபல நடிகை (video)

Mohamed Dilsad

More than 50 killed by suicide bomber in Kabul banqueting hall

Mohamed Dilsad

Leave a Comment