(UTV|COLOMBO)-மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.அன்ரன் மோகன்ராஜின் நெறிப்படுத்தலில், இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் தலைமையில், மன்னார் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நேற்று (06) இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை உள்ளடங்கிய 05 உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளுக்குள் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், இந்த மக்களின் குடிநீர் பிரச்சினை, பாதை பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் இணைத்தலைவர்களால் கலந்தாலோசிக்கப்பட்டு, சில பிரச்சினைகளுக்கான முடிவுகளும் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]