Trending News

மின்சார சபையின் பணிப்பாளர் சபை இன்று கோப் குழுவிற்கு..

(UTV|COLOMBO)-இலங்கை மின்சார சபை பணிப்பாளர் சபை மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி  இதனை தெரிவித்தார்.

மின்சார சபையின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் உள்ளிட்டவர்களை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரும் கோப் குழுவில் பிரச்சன்னமாகவுள்ளார்.

எஸ் பவர் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவர்களிடம் இதன்போது விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Over 11,000 Army absentees report during General Amnesty

Mohamed Dilsad

Rolling Stone and Imagine team for film series

Mohamed Dilsad

சூரியவௌ மைதானம் புனரமைப்பு

Mohamed Dilsad

Leave a Comment