Trending News

வீடியோ எடுத்த ரசிகையை தாக்கிய பிரபல நடிகை

(UTV|INDIA)-இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். பத்மாவத் படத்துக்கு பிறகு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது என்றும், நவம்பர் 19-ந் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் தீபிகா படுகோனேவும் ரன்வீர் சிங்கும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். அங்கு யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க மேக்கப் போடாமல் சுற்றி வந்தனர்.

புளோரிடாவில் உள்ள டிஸ்னி லேண்டுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். அங்கு வந்திருந்த இந்தியர்கள் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. இதனால் சுதந்திரமாக நடமாடி வந்த அவர்களை ஜனாப் என்ற இந்திய பெண் ரசிகை ஒருவர் கண்டுபிடித்து விட்டார். அவர்கள் முன்னால் சென்று வீடியோ எடுத்தார். மேலும் அவர்களை அழைத்து சிரிக்கச் சொல்லியும் கேட்டிருக்கிறார்.

இதை எதிர்பார்க்காத தீபிகா படுகோனே அதிர்ச்சி அடைந்தார். கோபத்தோடு அந்த பெண் அருகில் சென்று அவரை தாக்கி அவரிடம் இருந்த படங்களை அழித்து விட்டு சென்றாராம். இந்த தகவலை ஜனாப் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘தீபிகா படுகோனேயை வீடியோ எடுத்தற்காக அவர் என்னை தாக்கினார். அவமரியாதையாக நடந்து கொண்டார்’’ என்று கூறியுள்ளார். இதனால் தீபிகா படுகோனேவை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய மாணவர்கள்

Mohamed Dilsad

O.J. Simpson joins Twitter after 25 years of his arrest

Mohamed Dilsad

4,130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று

Mohamed Dilsad

Leave a Comment