(UTV|COLOMBO)-தொடர்சியாக மூன்று நாட்களாக முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்ட இந்த வாரத்தின் நாடாளுமன்ற அமர்வுகள் தற்சமயம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்த வாரத்திற்கான அமர்வு அன்றைய தினம் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் அமைதியின்மையை தோற்றுவித்தமையினால் சபை அமர்வு பிற்போடப்பட்டது.
நேற்று முன்தினம் புதன் கிழமை சபை அமர்வில் ஒத்தி வைப்பு வேளை பிரேரணையை முன்வைக்கவிருந்த ஜே.வி.யின் உறுப்பினர் நிஹால் கலப்பதி சபையில் பிரசன்னமாகாமை மற்றும் எதிர்கட்சி பேச்சாளர்கள் இன்மை ஆகிய காரணங்களால் நேற்று காலை 10.00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய நாளுக்கான சபை அமர்வின் போது ஒன்றிணைந்த எதிர்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா, ஊடகவியலாளர் பாதுகாப்பு தொடர்பிலான ஒத்தி வைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போது நாடாளுமன்றில் 16 உறுப்பினர்களே இருந்தனர்.
இதனால் உறுப்பினர்களை வரவழைக்க அழைப்பு மணி ஒலிக்க செய்யப்பட்ட போதும் போதிய உறுப்பினர் கூட்டமதிப்பெண் இல்லாதன் காரணத்தினால் சபை மீண்டும் இன்று முற்பகல் 10.00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதேவேளை, குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 95 வாக்குகளும், எதிராக 31 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதேவேளை, வற் எனப்படும் பெறுமதி வரி தொடர்பான திருத்தச் சட்டமூலமும் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]