Trending News

குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும்-ஹன்சிகா

(UTV|INDIA)-நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா கையில் இப்போது மூன்றே படங்கள் தான். விக்ரம் பிரபுவுடன் ‘துப்பாக்கி முனை’, அதர்வாவுக்கு ஜோடியாக ஒருபடம். தனி கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
ஆண்டுக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்துவரும் ஹன்சிகா இந்த ஆண்டு பிறந்தநாளில் எந்த குழந்தையையும் தத்தெடுக்கவில்லை.
இதுபற்றி கூறும்போது, மும்பை புறநகர் பகுதியில் ஒரு முதியோர் இல்லத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறேன். இதனால் தான் குழந்தையை தத்தெடுக்கவில்லை.
அதுக்காக பணம் சேர்க்குறது, வேலைகள் பார்க்குறது மாதிரியான வி‌ஷயங்களிலேயே பாதிநேரம் செலவாயிடுது. நான் சினிமாவுல என்ன பண்ண நினைக்கிறேனோ அதுக்கான முழு சுதந்திரமும் சப்போர்ட்டும் என் குடும்பத்துல இருக்கு.
குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறதுலேயும் அப்படித்தான். நான் இன்னும் ஒரு குழந்தைதான். கல்யாணம்ங்கிறது ரொம்ப தூரத்துல இருக்கு. அதை நோக்கிப் போகும் பாதையில நிறைய சவால்கள் இருக்கு. அதையெல்லாம் சாதிச்சுட்டுதான் கல்யாணம் பண்ணணும். ஸோ, இப்போதைக்கு சினிமாவில் சாதிக்கணும். குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும், குடும்பத்தைப் பார்த்துக்கணும்ங்கிற எண்ணம் மட்டும்தான்’ என்று கூறி இருக்கிறார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Lakshman Yapa Abeywardene denies Fowzie’s statement on No-Confidence Motion

Mohamed Dilsad

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

Mohamed Dilsad

ரயில் சேவையில் தாமதம்

Mohamed Dilsad

Leave a Comment