Trending News

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை

(UTV|COLOMBO)-நாட்டில், குறிப்பாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்றின் வேகமும் குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ජනාධිපතිවරණයේ තැපැල් ඡන්ද පත්‍රිකා බෙදාහැරීමේ කටයුතු 95% කින් අවසන්

Editor O

Australia calls on China to allow Uighur mother and son’s travel

Mohamed Dilsad

Maldives Ambassador to Sri Lanka decides to resign from post

Mohamed Dilsad

Leave a Comment