Trending News

புதிதாக கொண்டுவரப்படும் பஸ்களின் சேவைகளுக்கு பங்குதார நிறுவனம்

(UTV|COLOMBO)-போக்குவரத்து மற்றும் சிவில் விமான துறை அமைச்சினால் ஹங்கேரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள குளிரூட்டப்பட்ட 1௦௦௦ பஸ்களை இலங்கை போக்குவரத்து சபையும் பஸ்களை வழங்கும் ஹங்கேரிய நாட்டு நிறுவனத்துடன் அமைக்கப்படவுள்ள கூட்டு நிறுவனத்தின் மூலம் பயணிகளுக்கான போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகிறது.

மின்சாரத்தில் இயங்க கூடிய 200 பஸ்களும் 750 ஹைபிரிட் பஸ்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

 

மின்சாரத்தில் இயங்க கூடிய 250 பஸ்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள நகர பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படும் ஏனைய பஸ்கள் கொழும்பு மற்றும் தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் ஸ்ரீவர்தன எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

 

புதிதாக கொண்டுவரப்படும் பஸ்கள் ஹங்கேரிய நிறுவனத்தினால் பராமரிக்கப்படும்.

அதேபோல இந்த சேவையின் மூலம் பெறப்படும் வருமானத்தில் ஒரு பகுதி இலங்கை போக்குவரத்து சபைக்கு கிடைக்கும் வகையில் உடன்படிக்கை செய்துகொள்ளப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக ப்ரீதி பத்மன் சுரசேன பதவிப்பிரமாணம்

Mohamed Dilsad

National Blood Bank Director General removed

Mohamed Dilsad

ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පති (පරිපාලන) වැඩබලන්න ලලිත් පතිනායක පත් කරයි.

Editor O

Leave a Comment