(UDHAYAM, COLOMBO) – வென்னப்புவ கலவத்தை பிரதேசத்தில் நபரொருவர் பொல்லு மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு மேலும் சிலருடன் மோட்டார் வாகனத்தில் அவரின் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்று மீண்டும் திரும்பி வரும் போதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கொலை செய்த நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ள நிலையில், உயிரிழந்த நபருக்கும், சந்தேக நபருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த விரோதம் அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.