Trending News

சிவகார்த்திகேயனுடன் இணைந்த நயன்தாரா

(UTV|INDIA)-சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இதில் ராஜேஷ் இயக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில், துவங்கி நடைபெற்று வந்த நிலையில், நேற்று எஸ்.கே.13 படக்குழுவில் நயன்தாரா இணைந்திருக்கிறார். நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முதல் படமாக்கப்பட்டு வருகிறது. `வேலைக்காரன்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

Related posts

සුනාමි අනුස්මරණ සැමරුම් රටපුරා

Mohamed Dilsad

இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

“We will meet this challenge and defeat terrorism” – President

Mohamed Dilsad

Leave a Comment