Trending News

மேல் மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் முறைப்பாடு?

(UDHAYAM, COLOMBO) – மேல் மாகாண சபை அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவுறுத்த ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.

மாகாணத்தின் பல அமைச்சர்கள் பொது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதில்லை என ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தலைமையில் மாகாண சபையின் ஆளும் கட்சி குழுவின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சரின் முன்னிலையிலேயே குற்றம்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Kuwait bans visas for 5 Muslim majority nations

Mohamed Dilsad

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று

Mohamed Dilsad

Leave a Comment