Trending News

இங்கிலாந்துக்கு காபி குடிக்க சென்றாரா கோஹ்லி?

(UTV|ENGLAND)-இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு பதிலாக காபி அருந்தி மகிழ்கிறார்கள் என முன்னாள் வீரர் சந்தீப் பட்டீல் விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக அங்கு அணியின் திட்டம் என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் இணைந்து பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, கடந்த முறை இங்கிலாந்துக்கு சென்ற போதும் இப்படி தான் கேட்டார்கள்.

அதற்கு நான் இங்கிலாந்துக்கு சென்றதும் அங்குள்ள வீதிகளில் ஜாலியாக நடந்து சென்று காபி அருந்தி மகிழ்வேன். என்னுடைய சிந்தனை வித்தியாசமானது’ என்று பதில் அளித்தார்.

தற்போது, அந்த பதில் உண்மையாகும்விதமாக இந்திய அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை இங்கிலாந்து மண்ணில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இங்கிலாந்தில் நிலவும் சீதோஷ்ண நிலையில் அவர்கள் உண்மையிலேயே நல்ல காபி குடித்துவிட்டு உற்சாகமாக இருக்கிறார்கள் என முன்னாள் வீரர் சந்தீப் பட்டீல் கூறியுள்ளார்.

தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அசாதாரணமான திறமை கொண்டவர்கள். நான் தேர்வு குழு தலைவராக இருந்த போது அதை அறிவேன்.

ஆனால் இப்போது களத்தில் ஏதோ அறிமுக போட்டி போன்று பயந்து கொண்டு விளையாடுகிறார்கள். நான் முன்பு சொன்னது போல் கிரிக்கெட் ஒரு குரூரமான விளையாட்டு. இங்கு எதுவும் நிலையானது கிடையாது. முந்தைய நாள் ஹீரோவாக இருப்பவர்கள், இன்று ஜீரோவாகி விடுவார்கள் என கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

Related posts

Pope Francis’s letter to Malcolm Cardinal Ranjith

Mohamed Dilsad

Karannaagoda appears before CID

Mohamed Dilsad

Mahinda Rajapaksa leaves for Pakistan

Mohamed Dilsad

Leave a Comment