Trending News

பலத்த காற்று காரணமாக 17,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிப்பு

(UTV|COLOMBO)-பலத்த காற்று காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 17,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹட்டன், டிக்கோயா, மாஊசாகலை, மஸ்கெலியா, பட்டிபொல, தவளந்தென்ன, கினிகெத்தேன ஆகிய பகுதிகளில் மின்சார கம்பிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Former Ministers to face legal action if fail to handover official residences, vehicles

Mohamed Dilsad

பிரதான ரயில் சேவையில் தாமதம்

Mohamed Dilsad

வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை-ரோசி சேனாநாயக்க

Mohamed Dilsad

Leave a Comment