Trending News

ஒன்றிணைந்த எதிர்கட்சி சுயாதீனமாக செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளமை வெறும் நாடகமே

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்கட்சி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளமை வெறும் நாடகமே என அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களின் பின்னனியில் ஏதோவொரு அரசியல் சூழ்ச்சி ஒன்று இடம்பெறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் அனைத்து விடயத்திற்கும் சுதந்திரம் அளித்துள்ள நிலையில் அதனை தவறான வகையில் பயன்படுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றன.

எனினும் அதற்கு மக்கள் ஒருபோதும் இடம்தர போவதில்லை.

இதனிடையே, ஒன்றிணைந்த எதிர்கட்சி நாடாளுமன்றத்தில் தாங்கள் சுயாதீனமாக செயற்படுவோம் என்று அறிவித்துள்ள போதிலும், அவர்கள் ஒருபோதும் சுயாதீனமாக செயற்படமாட்டார்கள் எனவும் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Google serves Espresso link-ups for Cloud

Mohamed Dilsad

Prevailing showery condition to continue

Mohamed Dilsad

Fantasy Island to set up US $4 million Entertainment Park in Battaramulla

Mohamed Dilsad

Leave a Comment