Trending News

பிரபல அமெரிக்க பாடகி அரேத்தா ஃப்ராங்ளின் உடல்நலக் குறைவால் காலமானார்

(UTV|AMERICA)-ஹாலிவுட் நட்சத்திரமாக முடிசூட்டப்பட்டவரும் பாரமரியமான கிளாசிக் பாடல்களை பாடியவறுமான அரேத்தா ஃப்ராங்ளின் தனது 76 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

சிறுவயது முதலே பாடல்களை பாடி உலகம் முழுதும் அமெரிக்காவின் கலாச்சார சின்னமாக விளங்கிய அவர் 18 கிராமி விருதுகள் பெற்றுள்ளார். 1987-ம் ஆண்டு ராக் அண்டு ரோல் வாழ்த்தரங்கில் பங்கேற்ற முதல் பெண் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கணய புற்றுநோய் காரணமாக தனது இசைப்பயணத்தில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்ற இவர், நேற்று அவரது வீட்டில் காலமானார். அமெரிக்க மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் அரேத்தாவை தங்களுள் ஒரு சகாவாகவே பார்த்தனர்.

பில் கிளிண்டன் மற்றும் ஜிம்மி கார்ட்டர் போன்ற அமெரிக்க அதிபர்களின் பதவியேற்பு விழாவில் அரேத்தா பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு நாட்டின் உயர்ந்த விருதாக குடிமக்களுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி விருதை கடந்த 2005-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் வழங்கி கௌரவித்தார்.

கிட்டத்தட்ட 1960-களில் இருந்து 50 ஆண்டுகளுக்கும் மேல் இசைத்துறையில் காலத்தால் அழியா படைப்புக்கள் பலவற்றை அளித்த இவரது மறைவு அமெரிக்க மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட பலரும் அரேத்தா ஃப்ராங்ளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Syria demands withdrawal of US, Turkish forces, warns of countermeasures

Mohamed Dilsad

Records tumble as Eagles stun Patriots in Super Bowl LII

Mohamed Dilsad

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க பிரதமருக்கு அழைப்பு

Mohamed Dilsad

Leave a Comment