Trending News

ரஜினிகாந்த் ஜோடியாக திரிஷா?

(UTV|INDIA)-‘காலா’ படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

அதிரடி காட்சிகள், நகைச்சுவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக எடுக்கின்றனர். சென்னை, மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹாவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக தகவல்.

இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார் என்றும் அந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் திரிஷா இருப்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். திரிஷா இதுவரை ரஜினியுடன் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது என்று அடிக்கடி கூறி வந்தார்.

ரசிகர்கள் விரும்பும் வகையில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தை படத்தில் சித்தரித்து இருப்பதாகவும் இந்த வருடம் இறுதிக்குள் பட வேலைகளை முடித்து அடுத்த வருடம் ஆரம்பத்தில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Prof. Klaus Schwab pledges support to Sri Lanka

Mohamed Dilsad

விஜயகலா மகேஷ்வரன் பதவி நீக்கப்படுவாரா?

Mohamed Dilsad

මොණරාගල, වැලියායේ දරුණු අනතුරක්

Editor O

Leave a Comment