Trending News

வில்லியாக நடிக்க ஆசைப்படும் மடோனா

(UTV|INDIA)-காதலும் கடந்துபோகும், ஜூங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மடோனோ. சக நடிகைகள் ஹீரோயினாக நடிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். மடோனா வில்லி வேடத்தில் நடிக்கவும் தயார் என்கிறார். இதுபற்றி அவர் கூறியது; ஒரே பாணியிலான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. அதுபோன்ற வேடங்களை நான் தவிர்த்துவிடுகிறேன். குடும்பம், மற்ற விருப்பங்களில் நேரத்தை செலவிடாமல் முழுக்க சினிமாவில் மட்டுமே நேரத்தை செலவிடுவதில் என்ன நோக்கமிருக்கப்போகிறது.

என்னவிதமான படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். வில்லித்தனமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் எனக்கு ஆசை இருக்கிறது. முகத்தை மட்டும் காட்டிவிட்டு போவதுபோன்ற கதாபாத்திரங்களை நான் ஏற்பதில்லை. நடிப்பு தவிர பாடுவதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. 6 வயதிலிருந்தே நான் பாடி வருகிறேன். சினிமாவுக்கு வந்தபிறகு பாடுவதற்காக அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை. சொந்தமாக இசை குழுவும் வைத்திருக்கிறேன். விரைவில் தமிழ் ஆல்பம் ஒன்றை வெளியிட உள்ளேன்.

நடிகை என்றால் ஒல்லியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. நான் நிறைய சாப்பிடுவேன். அதை கட்டுப்படுத்த முடியாது. அதேசமயம் தகுந்த உடற்பயிற்சியும் செய்வேன். வெளியூர் சென்று சுற்றுவதெல்லாம் நான் விரும்புவதில்லை. உள்ளூரில் இருக்கவே ஆசைப்படுவேன். ஏதாவது வேலைக்காக செல்ல வேண்டுமென்றால்தான் வெளியில் செல்வேன். மற்றபடி படிப்பதிலும் நல்ல நிகழ்வுகளை பார்ப்பதிலும் நேரத்தை செலவிடுவேன். இவ்வாறு மடோனா கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Sri Lanka seeks waiver for Iranian oil imports

Mohamed Dilsad

பிரித்தானியாவில் பலத்த பாதுகாப்பு

Mohamed Dilsad

කතරගම දේවාලයේ අලින්ට නාන්න තටාකයක්

Editor O

Leave a Comment