(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றுக்கு ஒரே தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்தும் யோசனையை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அமைச்சர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை கட்சிகளைப் பிரதிநித்துவப் படுத்தும் உறுப்பினர்கள் நேற்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தனர்.
இதன்போது உத்தேச தேர்தல் முறைமை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பை அடுத்து கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோகணேசன், புதிய தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரவேசம் பாதிக்கப்படுகிறது.
இதனால் பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டதாக கூறினார்.
மேலும் தாங்கள் முன்வைத்த யோசனைகளை பிரதமர் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.