(UDHAYAM, COLOMBO) – தென் மாகாணத்தில் இன்று நான்கு மணிநேர பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனிடையே, ஊவா மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பு இன்று காலை 8 மணிக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.