Trending News

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-பேராதனை பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம், கலைப்பீடம், ஒன்றிணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீடம் மற்றும் கால்நடை வைத்திய பீடத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகள் இன்று(20) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

எனினும், பீடாதிபதிகளின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 27 ஆம் திகதி பொறியியல் பீடம் திறக்கப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொறியியல் பீடத்தின் மாணவர்கள் 80 வீத வருகையை பூர்த்தி செய்யாததால், பரீட்சைக்கு தோற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

இதனையடுத்து ஏற்பட்ட முரண்பாடுகளின் பின்னர், அண்மையில் பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

සුබසාධන වැඩසටහන්වල ප්‍රතිලාභ ජනතාවට කඩිනමින් දෙන්න – ජනපතිගෙන් ආණ්ඩුකාරවරුන්ට උපදෙස්

Editor O

50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிப்பு

Mohamed Dilsad

Malaysian High Court rejects application on Sri Lankan Envoy

Mohamed Dilsad

Leave a Comment