(UTV|HATTON)-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, ஹட்டன் ஸ்டெதன் வெஸ்டன் தோட்ட பகுதியில் உள்ள 3 லயன் குடியிருப்பு தொகுதிகளுக்கு மேல் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளமையினால் குறித்த தோட்ட மக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து இவ்வாறான சீரற்ற காலநிலை காணப்படுமாயின் வெடிப்பு காணப்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்படலாம் என்று தேசிய கட்டிட ஆய்வாளர்கள் கோரியுள்ளனர்.
குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள நில வெடிப்பு தொடர்பாக ஹட்டன் ஸ்டெதன் வெஸ்டன் தோட்ட பகுதிக்கு சென்று ஆய்வினை மேற்கொண்ட போதே, தேசிய கட்டிட ஆய்வாளர்கள் குறித்த தகவலினை தெரிவித்துள்ளார்கள்.
குறித்த தோட்ட பகுதியில் வசித்து வந்த 50 குடும்பங்களை சேர்நத 200 பேர் அங்கிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பாக ஹட்டன் புருட்கில் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
Constitutional Experts ‘baffled’ by President’s 19A comments