Trending News

ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய ரூ.700 கோடி நிதியுதவியை இந்தியா ஏற்க மறுப்பதற்கு காரணம் இது தானா?

(UTV|INDIA)-கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்கு சுமார் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியை மத்திய அரசு நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் வரலாறு காணாத மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நிலைகுலைந்துள்ளது. இதனால், பாதிப்புகள் ரூ.2600 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்த நிலையில், ரூ.2,600 கோடி அளவுக்கு நிவாரண உதவிகள் அம்மாநிலத்துக்கு தேவைப்படுகிறது.

கேரளாவில் மழை தீவிரமடைந்த நேரத்தில் இருந்தே முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்க முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தி வந்தார். அதன்படி பல மாநில அரசுகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்புகள் தங்களால் முடிந்த நிதியுதவிகளை அளித்து வந்தனர்.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருந்தது. இதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிரதமர் மோடியும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அளிக்கும் நிதியுதவியை மத்திய அரசு ஏற்குமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

கடந்த, 2004-இல் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் இருந்து இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவதற்கு இந்திய அரசு வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க மறுத்து வருகிறது. இதுபோன்ற பேரழிவுகளையும், அதன் சேதங்களை சீர் செய்ய இந்தியாவிலேயே போதுமான வசதிகள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த கொள்கை இந்திய அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2004-இல் சுனாமி பேரழிவின் போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க மறுத்தார். அன்று முதல் இந்த கொள்கை இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரப்படுகிறது. கடந்த 2013 உத்தரகண்ட் வெள்ளத்தின் போதும் இந்திய அரசு வெளிநாடு நிதியுதவிகளை நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 14 ஆண்டுகளாக இந்த கொள்கையை இந்திய அரசு கடைபிடித்து வருவதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் ரூ.700 கோடி நிவாரண உதவியை மத்திய அரசு ஏற்குமா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையிலேயே உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

“Deepavali victory of light over darkness” – President

Mohamed Dilsad

Priyanka Chopra gets emotional on her last official week in NYC

Mohamed Dilsad

SLFP Central Committee to convene today

Mohamed Dilsad

Leave a Comment