Trending News

தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாட்டை நீக்கி தேசிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று(27) வழங்கப்படவுள்ளன,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த ஆணைக்குழுக்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அரச நிர்வாக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியான எஸ்.ரணுக்கே இதன் தலைவராக செயற்படுகிறார்.

மொத்த அரச கட்டமைப்பையும் மதிப்பீடு செய்து புதிய சம்பள கட்டமைப்பை தயாரிப்பதே ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Former India Captain dies aged 71

Mohamed Dilsad

சுகாதார , கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு

Mohamed Dilsad

Kraigg Brathwaite to Captain West Indies in place of Jason Holder

Mohamed Dilsad

Leave a Comment