Trending News

பிரபல மொடல் அழகி கொலை…

(UTV|AMERICA)-அமெரிக்காவில் ‘பிளேபாய்’ மொடல் அழகி மர்மமான முறையில் ஆண் நண்பரது வீட்டில் இறந்துகிடந்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் கிறிஸ்டினா கார்லின் கிராப்ட் (36). இவர் ‘பிளே பாய்’ இதழின் முன்னாள் மாடல் அழகி ஆவார்.

சம்பவத்தன்று இவர் வீட்டின் படுக்கை அறையில் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 9 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ‘டேட்டிங்’கில் வாழ்ந்து வந்தார்.

கிறிஸ்டினா கார்லின் கொலை செய்யப்பட்ட அன்று ஆண் நண்பர் வீட்டில் இருந்தார். எனவே அவர் அவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ஏற்கனவே தனது வீட்டில் நடந்த கொள்ளை குறித்து கிறிஸ்டினா காவல்துறையினர் புகார் செய்திருந்தார். நகை, கைப்பை உள்ளிட்ட திருடு போன பொருட்களை கண்டுபிடித்த காவல்துறையினர் அவற்றை கொடுக்க சென்ற போது தான் அவரை பிணமாக மீட்டனர்.

மொடல் அழகி கிறிஸ்டினா கார்லின் கிராப்ட் நியூயோர்க்கை சேர்ந்தவர். பிளே பாய் தவிர வேனிட்டி பேர், மேக்சிம், விக்டோரியா சிக்ரட் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் மாடல் அழகியாக இருந்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Three accomplices of ‘Angoda Lokka’ arrested

Mohamed Dilsad

வீதி விபத்துக்கள் காரணமாக, நாளாந்தம் 8 முதல் 10 பேர் வரை உயிரிழக்கின்றனர்

Mohamed Dilsad

ඇමති රංජන් පාර්ලිමේන්තුවේදී හෙළිකළ ඇත්ත මෙන්න

Mohamed Dilsad

Leave a Comment