Trending News

கேரள கனமழை-இந்தியன் வங்கி ரூ.4 கோடி நிதியுதவி

(UTV|INDIA)-கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இதற்கிடையே, கன மழை, வெள்ளம் மற்றும்  நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு  திரும்பி வருகிறது. கேரளாவை  சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்துக்கு இந்தியன் வங்கி சார்பாக ரூ. 4 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனை, இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஏ.எஸ்.ராஜீவ் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இந்த நிதியை அவரிடம் வழங்கினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார்?

Mohamed Dilsad

மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

Mohamed Dilsad

நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை

Mohamed Dilsad

Leave a Comment